கருப்பின இளைஞர்களை அமெரிக்க போலீஸார் சுட்டுக் கொன்றதற்கு பழிக்குப் பழியாக 2 போலீஸ் அதிகாரிகளை கருப்பின இளைஞர் ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளார்.
அமெரிக்காவின் பெர்குஸன் நகரில் கடந்த ஆகஸ்ட் மாதம் பொம்மை துப்பாக்கி வைத்திருந்த மைக்கேல் பிரவுன் (18) என்ற கருப்பின இளைஞரை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
இதைத் தொடர்ந்து நியூயார்க் நகரில் கடந்த நவம்பரில் தடை செய்யப்பட்ட சிகரெட்டுகளை விற்பனை செய்ததாக கருப்பி னத்தைச் சேர்ந்த எரிக் கார்னர் என்பவரை போலீஸார் கைது செய்ய முயன்றனர். அப்போது போலீஸார் அவரது கழுத்தை நெரித்ததில் அவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக அமெரிக்கா முழுவதும் கருப்பின மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நியூயார்க் நகரில் புருக்ளின் பகுதியில் நேற்று காரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரபேல், வென்ஜியான் லீ ஆகிய 2 போலீஸ் அதிகாரிகளை கருப்பின இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். தப்பியோடியபோது அந்த இளைஞரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீஸ் விசாரணையில் இஸ்மாயில் பிரின்ஸ்லே (28) என்ற அந்த இளைஞர், பழிக்குப் பழியாக போலீஸ் அதிகாரிகளை சுட்டுக் கொன்றிருப்பது தெரியவந் துள்ளது.
அவர் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கருப்பின இளைஞர்களை சுட்டுக் கொன்ற போலீஸாருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும், நம்மில் ஒருவரை அவர்கள் சுட்டுக் கொன்றால் அவர்களில் 2 பேர் பலியாக வேண்டும். இதுதான் எனது கடைசி பதிவு என்று தெரிவித் துள்ளார்.
இதுகுறித்து நியூயார்க் போலீஸ் மூத்த அதிகாரி ஒருவர் கூறிய போது, இஸ்மாயில் பிரின்ஸ் லேவின் இன்ஸ்டாகிராம் பதிவை மோப்பம் பிடித்த போலீஸார் அவரை வலைவீசி தேடி வந்தனர். அதற்குள் அவர், 2 போலீஸ் அதிகாரிகளை சுட்டுக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உயிரிழந்த போலீஸ்காரர் வென்ஜியான் லீக்கு அண்மையில்தான் திருமணம் நடைபெற்றது என்று வருத்தத் துடன் தெரிவித்தார்
இந்தச் சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில், 2 போலீஸ் அதிகாரிகளை சுட்டுக் கொன்றி ருப்பது மிகவும் கோழைத்தனமான செயல், நாம் இரண்டு
வீரர்களை இழந்துவிட்டோம், அவர்களுக்கு வீரவணக்கம் செலுத் துவோம் என்று கூறியுள்ளார்.