உலகை உலுக்கிய பெஷாவர் ராணுவப் பள்ளித் தாக்குதலை திட்டமிட்ட தாலிபான் தீவிரவாதி சதாம் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
“சதாம் என்ற அந்த தீவிரவாதி கைபர் ஏஜென்சி பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கூட்டாளி ஒருவர் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளார்” என்று கைபர் ஏஜென்சி பகுதியின் அரசியல் பிரமுகர் ஷாஹப் அலி ஷா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
டிசம்பர் 16-ஆம் தேதியன்று பெஷாவர் பள்ளியில் தெஹ்ரீக்-இ-தாலிபான் தாக்குதல் நடத்தியதில் பெரும்பாலும் குழந்தைகள் உட்பட 150 பேர் பலியாயினர்.
இந்தத் தாக்குதலுக்காக 7 பேரை தயார்படுத்தி தாக்குதலை திட்டமிட்டவர்தான் இந்த சதாம்.
பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதல் சிலவற்றிலும் சதாம் தொடர்பு கொண்டிருக்கலாம் என்று பாகிஸ்தான் ராணுவம் சந்தேகிக்கிறது.