அமெரிக்காவின் பிரபல மாடல் அழகியும் தொலைக்காட்சி நட்சத்திரமுமான கிம் கர்தாஷியன் இந்தியா வருவதாக இருந்த பயணம் ரத்து செய்யப்பட்டது.
தனியார் தொலைக்காட்சியில் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் ரியலிட்டி ஷோவான 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த மாடல் அழகியும் தொலைக்காட்சி நட்சத்திரமுமான கிம் கர்தாஷியன் இன்று (வெள்ளிக்கிழமை) இந்தியா வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இதனை தவிர பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்பதாக இருந்தது.
இந்த நிலையில் விசா தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகளால் அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டதாக அவரது தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.