உலகம்

‘ஐ.எஸ். தலைவர் நரகத்துக்கு செல்வார்’

ஏஎஃப்பி

ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி நரகத்துக்குச் செல்வார் என்று சன்னி முஸ்லிம்களின் மூத்த மதத் தலைவர் சயூக் முகமது தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப் பதாவது: ஐ.எஸ். அமைப்பு தீவிரவாதத்தின் கொடூர முகம். அந்த அமைப்பு அழிக்கப்பட வேண்டும். ராணுவ பலத்தால் மட்டுமே ஐ.எஸ். அமைப்பை அழிக்க முடியாது. அந்த அமைப்பில் இளைஞர்கள் சேருவதை தடுத்தால் போதும். தானாகவே அவ்வமைப்பு காணாமல் போய்விடும்.

ஐ.எஸ். தீவிரவாதம் இளைஞர் களை தவறான வழியில் நடத்து கிறது. இதுகுறித்து உலகம் முழு வதும் வாழும் முஸ்லிம் மதத் தலைவர்கள் மக்களிடம் விழிப் புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

ஒரு காலத்தில் சிரியா மத ஒற்றுமையின் அடையாளமாகத் திகழ்ந்தது. அங்கு யூதர்கள், கிறிஸ்த வர்கள், ஷியா முஸ்லிம்கள், சன்னி முஸ்லிம்கள் அமைதியாக வாழ்ந்து வந்தனர். இப்போது உள் நாட்டுப் போரினால் அந்த நாடு சீர்குலைந்துள்ளது என்றார்.

SCROLL FOR NEXT