உலகம்

நேபாளத்தில் நிலநடுக்கம்

செய்திப்பிரிவு

நேபாளத் தலைநகர் காத்மாண்டில் மிதமான  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நேபாளம் புவியியல் மையம் தரப்பில், “ நேபாளத் தலைநகர் காத்மாண்டில் உள்ள பக்தாபூரில்  இன்று (சனிக்கிழமை) மாலை 4.15 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆகப் பதிவாகியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் சில நொடிகள் அதிர்வுகள் ஏற்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிடுள்ளன.

இந்த நிலநடுக்கத்தினால் தற்போதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று நேபாள அரசு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT