உலகம்

கடாஃபி ஆட்சியில் அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஒத்திவைப்பு

ஐஏஎன்எஸ்

மறைந்த மம்மர் கடாஃபி ஆட்சியில் இருந்த அதிகாரிகளுக்கான மரண தண்டனையை லிபியா நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.

லிபியாவை ஆட்சி செய்த மம்மர் கடாஃபி கொல்லப்பட்டதற்கு முன் அவரது அமைச்சரவையில் பதவிவகித்தபோது நடந்த முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 23 அதிகாரிகளின் தண்டனை நவம்பர் 26-அம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சினுவா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இவர்கள் அனைவருக்கு (நாளை) நவம்பர் 4-ஆம் தேதி தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது.

இவர்கள் மீது பதவியில் இருந்தபோது நிதி முறைகேடு, இனஅழிப்பு, பலாத்காரம், போராட்டக்காரகள் படுகொலை என பல்வேறு வழக்குகள் கடந்த 2011-ஆம் ஆண்டு நிரூபிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT