சிரியாவின் வடக்குப் பகுதியில் நடந்த மோதலில் கிளர்ச்சியாளர் 56 பேர் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து சிரிய கண்காணிப்புக் குழு கூறும்போது, “ சிரியாவில் வடகிழக்குப் பகுதியில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 56 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். ரஷ்யா மற்றும் சிரிய அரசு ஆபத்தான பல குண்டுகளை இட்லிப் மாகாணத்தில் விசீனர்.
தொடர்ந்து அப்பகுதியில் அரசுப் படைக்கும் கிளர்ச்சியாளர்களுக்கு சண்டை நடந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளனர்.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.
இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கடைசி இடமான இட்லிப் மாகாணத்தில் இறுதிச்சண்டை நடந்து வருகிறது.