உலகம்

பாக். சிறையில் இருந்து 40 இந்தியர் விடுதலை

பிடிஐ

பாகிஸ்தான் சிறையில் இருந்த 40 இந்தியர்களை அந்நாட்டு அரசு நேற்று விடுவித்தது. இவர்களில் 35 பேர் மீனவர்கள்.

கடந்த ஓராண்டு முதல் மூன்று ஆண்டுகளில் பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களை சேர்ந்து இந்த ஆண்டில் பாகிஸ்தான் 191 இந்தியர்களை விடுவித்துள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறினார்.

சார்க் மாநாட்டின்போது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தவிர மற்ற நாட்டு தலைவர்கள் அனைவருடனும் தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி பேச்சு நடத்தினார். நவாஸ் ஷெரீப்புடன் வெறும் நலம் விசாரிப்புடன் தனது பேச்சை மோடி முடித்துக் கொண்டார்.

இந்நிலையில் 40 இந்தியர்களை விடுவித்துள் ளதன் மூலம் இந்தியாவுடனான உறவை சகஜ நிலைக்கு கொண்டு வர பாகிஸ்தான் முயற்சிக் கிறது என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT