துனிசியாவில் கடந்த வாரம் நடந்த தற்கொலைப் படை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவரை அந்நாட்டு போலீஸார் கைது செய்துள்ளனர்.
துனிசியாவில் கடந்த வாரம் தற்கொலைப் படை தீவிரவாதிகள் இருவர் வெவ்வேறு இடங்களில் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் ஒருவர் பலியானார். 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
துனிசியாவை அதிர்ச்சிக்குள்ளாகிய இந்தக் குண்டுவெடிப்பு சம்பவத்துக்குக் கராணமானவரை கைது செய்துள்ளதாக அந்நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து துனிசியா தரப்பில், ''கடந்த வியாழக்கிழமை நடந்த தற்கொலைப் படை தாக்குதலுக்கு மூல காரணமான தீவிரவாதி அயிமன் சிம்ரி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மிகவும் ஆபத்தான தலைவர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.