பப்புவா நியூ கினியாவில் பழக்குடிகளுக்கிடையே நடந்த வன்முறையில் 20 பேர் பலியாகினர்.
இதுகுறித்து ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், ”பப்புவா நியூ கினியாவில் உள்ள கரிடா கிராமத்தில் பழங்குடிகளுக்கு இடையே நடந்த வன்முறை சம்பவத்தில் 20 பேர் பலியாகினர். இதில் குழந்தைகளும், பெண்களும் அடக்கம்.
இப்பகுதியில் முன்னர் நடந்த வன்முறை சம்பவத்துக்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த வன்முறை குறித்து பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மரேபே கூறும்போது, “ இந்து என் வாழ் நாளில் சோகமான நாள்”என்று தெரிவித்துள்ளார்.
மேலும் போலீஸ் அதிகாரிகள் குறைவாக இருந்ததே சமீபத்திய வன்முறை சம்பவங்களுக்கு காரணம் என்று பப்புவா கினியாஅரசு தெரிவித்துள்ளது.