உலகம்

ஏமன் ஐஎஸ் தலைவர் கைது

செய்திப்பிரிவு

ஐஎஸ் இயக்கத்தின் ஏமன் தலைவர் அபு ஒசாமா சவுதி கூட்டுப் படைகளால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இதுகுறித்து சவுதி கூட்டுப் படைகள் கூறும்போது, “ ஏமனில் ஐஎஸ் தலைவர் அபு ஒசாமா அல் முஹாஜிர் ஏமன் அரசு மற்றும் சவுதிப் படைகளால் கடந்த ஜூன் மாதம் 3 ஆம்  கைது செய்யப்பட்டார். மேலும் சில ஐஎஸ் உறுப்பினர்களும் அவருடன் கைது செய்யப்பட்டனர்” என்று தெரிவித்துள்ளது.

இதில் ஒசாமா அல் எந்த இடத்தில் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்படவில்லை.

ஒசாமாவின் கைது ஐஎஸ் இயக்கதுக்கு மிகப் பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஏமனுக்கு ஆதரவாக அமெரிக்கா, சவுதி

ஏமனில் ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஏமன் அரசுக்கு ஆதரவாக  சவுதி மற்றும் அமெரிக்கா தொடர்ந்து அங்குள்ள தீவிரவாத முகாம்களின் மீது வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன.

SCROLL FOR NEXT