உலகம்

சியரா லியோன் வெள்ளத்துக்கு 300 பேர் பலி

ஏஎஃப்பி

மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்துக்கு 300 பேர் பலியாகியுள்ளனர். 600-க்கும் மேற்பட்டோர் நிலை என்னவானது எனத் தெரியவில்லை.

இது குறித்து சியாரா லியோன் அதிபர் எர்னஸ்ட் பாய் கோரோமா கூறும்போது,  "நாட்டின் பெரும்பான்மையான பகுதி அழிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு அவசரமாக உதவி தேவைப்படுகிறது” என்றார்.

வெள்ளம் பாதித்த இடங்களில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

சியாரா லியோனின் அவசர நிலையை புரிந்து கொண்ட இஸ்ரேல் அரசு, தண்ணீர், மருந்துகள், மக்களுக்கு தேவையான அடிப்படை பொருட்களை வழங்க உறுதியளித்துள்ளது.

இந்த வெள்ளப் பெருக்கு குறித்து ஐநா தரப்பில், "தொற்று நோய்கள் ஏற்படாமலிருக்க தொடர்ந்து காண்கானிக்கப்பட்டு வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT