உலகம்

சீனாவில் புதிய புல்லட் ரயில்

பிடிஐ

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தி இயங்கும் புதிய புல்லட் ரயிலை சீனா வடிவமைத்து வருகிறது. விரைவில் இந்த ரயிலின் சோதனை ஓட்டத்தைத் தொடங்க அது திட்டமிட்டுள்ளது.

இந்தப் புதிய தொழில்நுட்பத் துக்கு சீன ரயில் நிர்வாகத்தின் அனுமதி கிடைத்துள்ளது. இதுகுறித்து சீனாவின் அதிவேக ரயில் திட்டத்தின் தலைவர் ஜியா லிமின் செய்தி யாளர்களிடம் கூறும்போது, "இந்தப் புதிய ரயில் 2018 முதல் பயன்பாட்டுக்கு வரும். விரைவில் இதன் சோதனை ஓட்டம் நடைபெறும்.

இந்தப் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் எரிபொருள் சிக்கனமாவதோடு இயங்கும்போது ஏற்படும் ஒலியின் அளவும் குறையும்" என்றார்.

SCROLL FOR NEXT