அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒரு டாக்டர் துப்பாக்கியால் சுட்டதில் மற்றொரு பெண் டாக்டர் உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து காவல் துறை ஆணையர் ஜேம்ஸ் பி.ஓ.நீல் கூறும்போது, “நியூயார்க்கில் உள்ள பிராங்க்ஸ் லெபனான் மருத்துவமனைக்குள் சென்ற ஹென்றி பெல்லோ (45) என்ற நபர் அங்கிருந்த பெண் டாக்டரை துப்பாக்கியால் சுட்டுக் கொன் றார். மேலும் அவர் துப்பாக்கி யால் சுட்டதில் படுகாயமடைந்த 6 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படு கிறது. இதில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது” என்றார்.
இதனிடையே, ஹென்றி தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதில் அவரும் உயிரிழந்தார். லெபனான் மருத்துவ மனையில் டாக்டராக பணியாற்றி வந்த ஹென்றி, தன் மீது பாலியல் குற்றம் சுமத்தப்பட்டதால் 2015-ல் ராஜினாமா செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர், அந்த மருத்துவமனைக் குச் சென்று அங்கிருந்தவர் களை துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 2004-ம் ஆண்டிலும் பாலியல் புகாரின் பேரில் ஹென்றி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து நியூயார்க் நகர மேயர் பில் டி பிளாசியோ கூறும்போது, “இது தீவிரவாதம் தொடர்பான சம்பவம் அல்ல. பணியிட தகராறு காரணமாகவே இந்த சம்பவம் நடந்துள்ளது” என்றார்.