உலகம்

ஜி 20 மாநாட்டில் ட்ரம்ப், புதின் ரகசிய சந்திப்பா?

பிடிஐ

ஜெர்மனியில் நடந்த ஜி 20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ரகசியமாக இரண்டாவது முறை சந்தித்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சவுதி அரேபியா, மெக்ஸிகோ, ஜப்பான், இத்தாலி, இந்தோனேசியா, இந்தியா, பிரான்ஸ், சீனா, கனடா, பிரேசில், ஆஸ்திரேலியா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகள் ஜி 20 அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன.

இந்த அமைப்பின் உச்சி மாநாடு வரும் கடந்த 7, 8-ம் தேதிகளில் ஜெர்மனியின் ஹேம்பர்க் நகரில் நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் முதல்முறையாக சந்தித்துப் பேசினர்.

அந்தச் சந்திப்பில் சிரியா, உக்ரைன் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஜி20 மாநாட்டில் ட்ரம்பும், புதினும் ரகசியாக இரண்டாவது முறை சந்தித்து பேசியதாக ஊடங்களில் செய்தி வெளியாகியுள்ளதால் சர்சை எழுந்துள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை தரப்பில், "ட்ரம்ப் மற்றும் புதினுக்கு இடையே இரண்டாவது சந்திப்பு ஏதும் நடைபெறவில்லை. ஆனால் விருந்தின் இறுதி தருணத்தில் சில நிமிடங்கள் இருவரும் பேசி கொண்டனர். ஆனால் இந்தச்ச்செய்தியை வெள்ளை மாளிகை மறைந்துள்ளதாக ஊடகங்கள் கூறுவது பொய்யானது அபத்தமானது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT