உலகம்

ஆஸ்திரேலியாவில் தீவிரவாத தடுப்புக்காக தனி அமைச்சகம்

செய்திப்பிரிவு

ஆஸ்திரேலிய அரசில் முதல்முறை யாக தீவிரவாத தடுப்புக்காக தனி அமைச்சகம் உருவாக்கப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்த நாட்டு பிரதமர் மால்கம் டர்ன்புல், கான்பெராவில் நிருபர்களிடம் கூறியதாவது:

சர்வதேச தீவிரவாதம் மிகப் பெரும் பிரச்சினையாக உருவெடுத் துள்ளது. இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஆஸ்திரேலி யாவில் தீவிரவாத அச்சுறுத்தல் களைச் சமாளிக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன் ஒருபகுதியாக உளவுத் துறையை மேம்படுத்தவும் உள்நாட்டுப் பாதுகாப்பை பலப் படுத்தவும் அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. தற்போது தீவிரவாத தடுப்புக்காக தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள் ளது. இதன்மூலம் நாட்டின் பாது காப்பு மேம்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT