இராக்கில் ஐ.எஸ். அமைப்பின் பிடியில் இருந்த மோசூல் நகரை அந்த நாட்டு ராணுவம் அமெரிக்க கூட்டுப் படைகளின் உதவியுடன் அண்மையில் மீட்டது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் கவனம் தற்போது சிரியா மீது திரும்பியுள்ளது.
அங்குள்ள ராக்கா நகரம் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலைமையகமாகக் கருதப்படுகிறது. அந்த நகரை அமெரிக்காவின் ஆதரவு பெற்ற சிரியா ஜனநாயக படை (எஸ்டிஎப்) சுற்றி வளைத்துள்ளது. அங்கு ஐ.எஸ். வசம் இருந்த அல்-யார்முக் என்ற பகுதியை எஸ்டிஎப் நேற்று முன்தினம் கைப்பற்றியது. இதுகுறித்து எஸ்டிஎப் செய்தித்தொடர்பாளர் ஜிகான் கூறியதாவது:
ராக்காவை நோக்கி தொடர்ந்து முன்னேறி வருகிறோம். விரைவில் அந்த நகரை கைப்பற்றுவோம் என்று தெரிவித்தார்.