ஜி20 மாநாட்டில் ஜப்பான் மற்றும் கனடா பிரதமருடன் பிரதமர் மோடி இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஜி20 அமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் புதன்கிழமை தொடங்கியது. மாநாட்டில் பங்கேற்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்டோரை ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் வரவேற்றார்.
இந்த மாநாட்டின் ஒருபகுதியாக பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகியவற்றின் தலைவர்களுடன் மோடி தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து வெள்ளிக்கிழமை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூ மோடி இரு நாடுகள் உறவு குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
இந்தச் சந்திப்பு சில நிமிடங்கள் நடைபெற்றதாக அதில் முக்கிய விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) தென் கொரியா, இத்தாலி, மெக்ஸிகோ, லண்டன், வியட்நாம் ஆகிய நாடுகளின் தலைவர்களை மோடி சந்திக்கிறார். இதனைத் தொடர்ந்து இந்தியா திரும்ப உள்ளார்.