பிலிப்பைன்சின் மத்தியப் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9-ஆக பதிவாகியது.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம், "பிலிப்பைன்ஸில், லெய்ட் தீவுக்கு அருகிலுள்ள ஒர்மாக் நகரத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை 9.41 மணியளவில் 5.9 என்ற ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 12.7 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது" என்று கூறியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
முன்னதாக பிலிப்பைன்ஸின் மத்தியப் பகுதியில் வியாழக்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 2 பேர் பலியாகியாகினர். 70 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.