உலகம்

அமெரிக்க பயண தடையில் தளர்வு

செய்திப்பிரிவு

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 6 நாடுகளைச் சேர்ந்த பயணிகள், அகதிகள் அமெரிக்காவில் நுழைய அந்த நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் தடை விதித்தார்.

அந்த ஆணை கடந்த 1-ம் தேதி அமலுக்கு வந்தது. அதன்படி அமெரிக்க குடிமகனின் பெற்றோர், மனைவி, மகன், மகள் ஆகிய நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்படும். தாத்தா, பாட்டி, பேரக்குழந்தை களுக்கு விசா வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு ஹவாய் மாகாண நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி டெரிக் வாட்சன் வழக்கை விசாரித்தார். அப்போது அவர் கூறியபோது, தடையாணை யில் பாட்டி- தாத்தா, மருமகன், மருமகள், அத்தை, மாமா உள்ளிட் டோருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT