உலகம்

குல்பூஷண் மரண தண்டனையை நிறைவேற்ற கோரி மனு

செய்திப்பிரிவு

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி அந்த நாட்டு ராணுவம் 2016 மார்ச்சில் அவரை கைது செய்தது. கடந்த ஏப்ரல் 10-ம் தேதி பாகிஸ் தான் ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து நெதர்லாந்தில் உள்ள ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய அரசு வழக்கு தொடர்ந்தது. இதனை கடந்த மே 10-ம் தேதி விசாரித்த 11 நீதிபதிகள் அமர்வு, குல்பூஷண் ஜாதவ் மரண தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்தப் பின்னணியில் ஜாதவுக்கு உடனடியாக மரண தண்டனையை நிறைவேற்றக் கோரி பாகிஸ்தான் லாகூர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி ஷாகித் கரீம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அவர் விடுப்பில் செல்வ தால் வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றக் கோரி தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளார்.

SCROLL FOR NEXT