இந்திய - அமெரிக்க பாதுகாப்பு குறித்து ஆலோசிக்க இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் அமெரிக்கா செல்கிறார்.
டர்ம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு, முதல்முறையாக அஜித் டோவல் வாஷிங்டன் செல்கிறார். அங்கு அவர், டர்ம்ப் நிர்வாக அதிகாரிகளுடன் இருநாட்டு உறவு குறித்து ஆலோசனை நடத்தவிருக்கிறார்.
இதன்படி மார்ச் 24-ம் தேதி அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மேட்டிஸ்ஸை சந்திக்கிறார் அஜித் டோவல்.
மேலும் இந்தப் பயணத்தில் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் மெக் மாஸ்ட்ரை அவர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்க ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜெஃப் டாவிஸ் பத்திரிகையாளரிடம் கூறும்போது, "இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுடனான சந்திப்பில் இருநாடும் எதிர்கொள்ளும் பாதுகாப்பு பிரச்சினைகள், குறித்து பரவலாக ஆலோசிக்கப்படும்"என்றார்.