அணுஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட அதிநவீன ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் நேற்று நடத்தியது.
900 கிலோ மீட்டர் வரை பாயும் திறன் கொண்ட இந்த ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்ததாக பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த வாரம் 1500 கி.மீட்டர் தொலைவு பாயும் திறன் கொண்ட ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் நடத்தியது நினைவுகூரத்தக்கது.