உலகம்

தீவிரவாதத்துக்கு எதிரான போருக்கு துருக்கி அதிபர் எர்டோகன் அழைப்பு

செய்திப்பிரிவு

தீவிரவாதத்துக்கு எதிராக போர் தொடுக்க உலகத் தலைவர்களிடத்தில் துருக்கி அதிபர் எர்டோகன் அழைப்பு விடுத்துள்ளார்.

இரண்டு நாள் அரசு முறை பயணமாக ஞாயிற்றுக்கிழமையன்று இந்தியா வந்த துருக்கி அதிபர் எர்டோகன் புதுடெல்லியில் பிரதமர் மோடியை திங்களன்று சந்தித்து பேசினார். இந்தத் சந்திப்பில் பயங்கரவாத அச்சுறுத்தலைகளை அழிக்க இரு தலைவர்களுர்களும் உறுதி எடுத்தனர்.

இந்தச் சந்திப்பில் துருக்கி அதிபர் எர்டோகன் கூறியதாவது, "தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் துருக்கி துணை இருக்கும். தீவிரவாதத்தால் பயம் மற்றும் துன்பம் பரவ நாங்கள் அனுமதிக்க மாட்டோம். பயங்கரவாதிகள் தங்கள் சொந்த இரத்தத்தாலேயே மூழ்கடிக்கப்படுவார்கள். சுக்மா மாவட்டத்தில் இந்தியாவின் சிஆர்பிஎஃப் படையினர் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு எனது கண்டனங்கள்" என்றார்.

'காஷ்மீர் தொடர்பாக பல தரப்பு பேச்சு வார்த்தை தேவை'

தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு காஷ்மீர் பிரச்சினை குறித்து எர்டோகன், "நாம் இனியும் காஷ்மீரில் உயிரிழப்புகள் ஏற்பட அனுமதிக்கக் கூடாது. நாம் காஷ்மீர் விவகாரத்தில் தலையிட்டு பிரச்சினை தீர்க்க வழி தேட வேண்டும். காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக பலதரப்பு பேச்சு வார்த்தை தேவை" இவ்வாறு கூறினார்.

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாட்டின் தலையீடு தேவையில்லை என்று இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியிருந்தது. இந்த நிலையில் காஷ்மீர் குறித்து துருக்கி அதிபர் எர்டோகன் கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT