சீனாவில் உள்ள ஒரு வனவிலங்கு பூங்காவில், சண்டை போட்டுக் கொண்டு காரிலிருந்து இறங்கிய 2 பெண்களை புலிகள் தாக்கி யதில் ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயமடைந்தார்.
பெய்ஜிங்கில் உள்ள படாலிங் வனவிலங்கு பூங்காவில் சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகள் சுதந்திரமாக சுற்றித் திரியும் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் காரில் உலா வர அனுமதி உண்டு. இந்நிலையில், ஒரு வயதான பெண், ஒரு இளம் தம்பதி மற்றும் ஒரு குழந்தை என 4 பேர் காரில் சென்றுள்ளனர்.
அப்போது கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த இளம்பெண் காரிலிருந்து இறங்கி உள்ளார். அப்போது அங்கிருந்த ஒரு புலி அவரை தாக்கி இழுத்துச் செல்ல முயன்றது. இதையடுத்து, அவரைக் காப்பாற்றுவதற்காக காரிலிருந்த வயதான பெண்ணும் இறங்கி உள்ளார். இதனிடையே மற்றொரு புலி அவரை பலமாக தாக்கிக் கொன்றது.
இதை அறிந்த பூங்கா ஊழியர்கள் விரைந்து சென்று அந்த இளம்பெண்ணை படுகாயங் களுடன் காப்பாற்றி உள்ளனர். இவர்களைக் காப்பாற்ற முயன்ற ஒரு ஆண் மற்றும் குழந்தைக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
இந்தக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அப்பகுதியில் காரிலி ருந்து இறங்கக்கூடாது என்ற எச்சரிக்கையை மீறியதே இந்த விபரீதம் ஏற்படக் காரணமாக அமைந்தது.