ஜப்பான் நாடாளுமன்றம் நவம்பர் 21-ம் தேதி கலைக்கப்படும் என்று அந்த நாட்டு பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் பொருளாதார வளர்ச்சி பெரும் சரிவைச் சந்தித் துள்ளது. இதற்கு பொறுப்பேற்று நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு பொதுத்தேர்தல் நடத்த ஆளும் முற்போக்கு ஜனநாயகக் கட்சி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பிரதமர் ஷின்சோ அபே தலைநகர் டோக்கியோவில் நிருபர்களிடம் நேற்று கூறிய போது, வரும் 21-ம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்படும், விரைவில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
அரசின் பதவிக் காலம் முடிவடைய இன்னும் 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில் பொருளாதார தேக்கநிலை காரணமாக முன்கூட்டியே நாடாளு மன்றத்தை கலைக்க ஷின்சோ அபே முடிவு செய்துள்ளார்.
வரும் டிசம்பரில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.