உலகம்

அமெரிக்காவின் நண்பன் இந்தியா: சபாநாயகர் பால் ரயன் புகழாரம்

செய்திப்பிரிவு

அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்புநாடாக இந்தியா மாறி வரு கிறது என்று அந்த நாட்டு பிரதி நிதிகள் சபையின் சபாநாயகர் பால் ரயன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அண்மையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டின் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். இது குறித்து பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பால் ரயன் கூறியதாவது:

உலக அமைதியைக் கருத்திற் கொண்டு பசிபிக், இந்திய பெருங் கடல் பாதுகாப்பில் அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து பணி யாற்ற வேண்டும். வருங்காலத்தில் பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அண்மைகாலமாக அமெரிக்காவின் மிகநெருங்கிய நட்புநாடாக இந்தியா மாறிவருகிறது. இது மகிழ்ச்சி அளிக்கிறது

அமெரிக்க நாடாளுமன்றத்தில் பலர் மோடியின் ரசிகர்களாகி விட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் பால் ரயன் எதிர்க் கட்சியான குடியரசு கட்சியைச் சேர்ந்தவர். அதிபர் ஒபாமாவின் வெளியுறவுக் கொள்கையை அவர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். ஆனால் இந்தியா விவகாரத்தில் மட்டும் பால் ரயன் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார்.

வரும் நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு குடியரசு கட்சி அரசு அமைத்தால் கூட இந்திய, அமெரிக்க நல்லுறவு தொடர்ந்து நீடிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT