அமெரிக்காவில் தாடி வைத்ததால் வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.31 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நியூஜெர்சி மாகாணத்தைச் சேர்ந்த சீக்கியரான குர்பிரீத் கேர்கா அங்குள்ள கார் விற்பனை நிலையத்தில் விற்பனை உதவியாளராக சேர விண்ணப்பித்திருந்தார். அப்பணிக்கான அனைத்துத் தகுதிகளும் இருந்தும் தாடி வைத்திருந்தார் என்ற ஒரு காரணத்தை சுட்டிக்காட்டி அவருக்கு வேலை வழங்க அந்நிறுவனம் மறுத்துவிட்டது.
இதையடுத்து அமெரிக்காவின் சமவேலைவாய்ப்பு உரிமை கமிஷனில் குர்பிரீத் முறையீடு செய்தார்.
இதனை விசாரித்த கமிஷன், தனது மத நம்பிக்கை காரணமாக குர்பிரீத் சிங் தாடியை எடுக்க மறுத்துள்ளார்.இதையடுத்து அவருக்கு வேலை மறுக்கப்பட்டுள்ளது.
மத அடிப்படையில் வேலை மறுக்கப்பட்டுள்ளது என்றுதான் இதனைக் கருத வேண்டியுள்ளது. எனவே அந்த நிறுவனம் குர்பிரீத்துக்கு ரூ.31 லட்சம் நஷ்டஈடு அளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது.