உலகம்

அமெரிக்காவில் பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச் சூடு

செய்திப்பிரிவு

அமெரிக்காவில் பென்சில்வேனியா மாகாணம் பித்ஸ்பர்க நகரில் பள்ளிக்கூடம் அருகில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில், மாணவர்கள் 3 பேர் காயமடைந்தனர்.

இச்சமபவம் குறித்து பித்ஸ்பர்க நகர் பள்ளியின் செய்தி தொடர்பாளர் எபோனி புஹ் கூறுகையில்: பள்ளி வளாகத்துக்கு அருகே துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. மாணவர்கள் தங்களது வாகனங்களை எடுக்கச் சென்ற போது விபத்துக்குள்ளானது.

மாணவர்களுக்கு சிறிய அளவிலேயே காயம் ஏர்பட்டுள்ளது. உயிருக்கு எந்த் ஆபத்தும் இல்லை. துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் யார் என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT