ஜஸ்டின் ட்ருடியூ ஆடம் பிலன் பிறந்து சில நாட்களிலேயே சமூக ஊடகங்கள் மற்றும் கனடா மக்கள் மத்தியில் பிரபலமாகியிருக்கிறார்.
சிரியாவைச் சேர்ந்த முகமத் பிலன் மற்றும் அவரது அஃப்ரா பிலன் அங்கு நடைபெறும் உள்நாட்டுப் போர் காரணமாக டமாஸ்கஸிலிருந்து அகதிகளாக மகள் நயா(4) மற்றும் மகன் நேல் (3) ஆகியவர்களுடன் 2016-ம் ஆண்டு கனடாவுக்கு அகதிகளாக அடைக்கலம் புகுந்துள்ளனர்.
கனடாவில் அகதிகளாக வரும் மக்களுக்கு அந்நாட்டு அதிபர் ஜஸ்டின் ட்ருடியூ அளித்த வரவேற்பும்,அகதிகளின் வாழ்வதாரத்துக்காக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளும் முகமத் பிலன் மற்றும் அவரது மனைவி அஃப்ரா பிலன்னை நெகிழச் செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தங்களது அன்பை வெளிப்படுத்தும் விதமாக மே 4-ஆம் தேதி பிறந்த தங்களது மூன்றாவது (ஆண்) குழந்தைக்கு ஜஸ்டின் ட்ருடியூ ஆடம் பிலன் என்று பெயர் சூட்டியுள்ளனர்.
இதுகுறித்து முகமத் பிலன் கூறும்போது, "நாங்கள் ஐஸ்டினை நேசிக்கிறோம். அகதிகளுக்காக அவர் எடுக்கும் முயற்சியை நாங்கள் வரவேற்கிறோம். ஜஸ்டின் அகதிகளுக்காக நிறைய உதவிகள் செய்து வருகிறார்.
நாங்கள் கனடாவில் இருப்பதற்கு ஜஸ்டின்தான் காரணம். கனடாவில் போர் இல்லை. இங்கு வெடுகுண்டு சத்தங்கள் கிடையாது. இங்கு அமைதி நிலவுகிறது. இங்கிருப்பது எங்களுக்கு வித்தியாசமான அனுபவமாக உள்ளது
எங்களது குழந்தை என்றாவது ஒரு நாள் அவனது பெயருக்கு காரணமானவரை சந்திப்பான் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூ நடவடிக்கையால் அந்நாட்டில் சுமார் 40,000 சிரிய அகதிகள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.