உலகம்

சிரியாவில் ஐஎஸ்ஸுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப் படைகள் புதிய யுத்தம் அறிவிப்பு

பிடிஐ

ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் உள்ள ரக்கா நகர் மீது அமெரிக்க கூட்டுப் படைகள் புதிய யுத்தத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளன.

சிரியா, இராக்கில் பெரும் பகுதியைக் கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியாவின் ரக்கா நகரைத் தலைமை யிடமாகக் கொண்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் இராக்கின் மோசூல் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகளிடமிருந்து மீட்க, இராக் அரசு கூட்டுப் படை தீவிரமாகப் போரிட்டு வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்க ஆதரவு கூட்டுப் படைகள் தரப்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்ட புதிய அறிவிப்பில், "நாங்கள் இன்று சிரியாவின் ரக்கா நகரிலுள்ள ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக புதிய யுத்தத்தை துவங்கி இருக்கிறோம். ரக்கா பகுதி பயங்கரவாதிகளின் தலைமையிடம் என்று அழைக்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

மோசூல் நகரில் ஏற்கெனவே ஐ.எஸ். தீவிரவாதிகள் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT