இந்தியாவின் 70-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மறைந்த பழம்பெரும் கர்நாடக பிண்ணனி இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியை ஐக்கிய நாடுகள் சபை கவுரவிக்கிறது.
இந்தியாவின் 70-வது சுதந்திர தினம் அடுத்த வாரம் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையில் 50 ஆண்டுகளுக்கு முன்பு தனது வசீகர குரலால் அனைவரையும் இசை இன்பத்தில் ஆழ்த்திய மறைந்த கர்நாடக இசை பாடகி எம்.எஸ் சுப்புலட்சுமியை கவுரவப்படுத்த ஐக்கிய நாடுகளின் சபை முடிவு செய்துள்ளது.
இதனை முன்னிட்டு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையில் இடப்பெற்றுள்ள இந்திய உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக, இந்தியாவின் ஐ. நா தூதர் சையத் அக்பருதீன் தனது ட்விட்டர் பக்கத்தில் "ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சியோடு, எம்.எஸ் சுப்புலட்சுமியை கவுரவிக்கும் வகையில் அவரது புகைப்படங்கள் அடங்கிய புகைப்பட கண்காட்சியும் இடப்பெறவுள்ளது” என பதிவிட்டுள்ளார்.