பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் மைதானத்துக்கு செய்தி சேகரிக்க பத்திரிக்கையாளர்கள் சென்ற பேருந்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த தாக்குதலில் பேருந்தின் இரு ஜன்னல்கள் நொறுக்கப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த பத்திரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பிலாரஸை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
தாக்குதல் தொடர்பாக பிரேசில் போலீஸார் தரப்பிலிருந்து இன்னும் தெளிவான தகவல் வெளியிடப்படவில்லை. இருப்பினும் துப்பாக்கி தாக்குதலாக இருக்கலாம் என சந்தேக்கிக்கப்படுகிறது.
முன்னதாக பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலும் கடந்த வாரம் பிரேசிலில் ஒலிம்பிக் மைதானத்துக்கு அருகே குண்டுவெடுப்பு நிகழ்ந்தது கவனிக்கத்தக்கது.