கிர்கிஸ்தானில் சீன தூதரகம் அருகே நிகழ்ந்த கார் குண்டு தாக்குதலில் 3 அதிகாரிகள் காயமடைந்தனர்.
குண்டு வெடிப்பு தொடர்பாக கிர்கிஸ்தானின் துணை பிரதமர் செனிஷ் ரசாகோவ், "கிர்கிஸ்தானில் சீன தூதரகத்தின் நுழைவாயிலின் அருகே கார்குண்டு செவ்வாய்கிழமை வெடித்ததில் காரை ஓட்டி வந்த தீவிரவாதி பலியானார்.
மேலும் தூதரகத்திலிருந்த 3 அதிகாரிகள் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அருகேவுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது"என்றார்.
இந்த நிலையில் கிர்கிஸ்தானில் சீன தூதரகத்தில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு சீனா வெளியுறவு அமைச்சகம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.