அமெரிக்காவின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக ரெக்ஸ் டில்லர்சன் (64) நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் உடன் இருந்தார்.
இதுகுறித்து ட்ரம்ப் கூறும்போது, “மத்தியக் கிழக்கு நாடுகள் மற்றும் உலகம் முழுவதும் பல்வேறு சவால்கள் உள்ளன. இந்நிலையில் மிகவும் திறமையான டில்லர்சன் வெளியுறவு அமைச்சராக பொறுப் பேற்றுள்ளதால், அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு கிடைப்பது டன் அமைதியையும் ஸ்திரத்தன் மையையும் நிலைநாட்ட முடியும் என நம்புகிறேன்” என்றார்.
இதுபோல, மிகவும் முக்கிய மான பொறுப்பை தன்னிடம் ஒப்படைத்ததற்காக ட்ரம்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக டில்லர்சன் தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ட்ரம்ப், எக்சான் மொபில் எண்ணெய் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான டில்லர்சனை வெளியுறவு அமைச்சராக நியமனம் செய்தார்.
இவரது நியமனத்தை உறுதி செய்வது தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தின் செனட் சபையில் விவாதம் நடைபெற்றது. அப்போது, டில்லர்சன் ரஷ்யாவு டன் நெருங்கிய தொடர்பு வைத் திருந்ததால் அவரை இந்தப் பதவிக்கு நியமனம் செய்யக்கூடாது என பலர் கடும் எதிர்ப்பு தெரிவித் தனர். இது தொடர்பான வாக் கெடுப்பின்போது ஆதரவாக 56 வாக்குகளும் எதிராக 43 வாக்கு களும் பதிவானதால், அவரது நியம னம் உறுதி செய்யப்பட்டது.