உலகம்

வெறுப்பிலும் வன்முறையிலும் ஊறிய மனநிலையே உலக அமைதிக்கு பெரும் சவால்: மோடி

பிடிஐ

Mindsets rooted in hate & violence biggest challenge to world peace: Modi

இருநாடுகளுக்கு இடையேயான சண்டையைக் காட்டிலும் வெறுப்பிலும் வன்முறையிலும் ஊறிய மனநிலையே உலக அமைதிக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இலங்கை சென்றுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்புவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், "இன்றைய சூழலில் சர்வதேச அமைதிக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது இரண்டு நாடுகளுக்கு இடையேயான சண்டை அல்ல. மாறாக வெறுப்பிலும் வன்முறையிலும் ஊறிய மனநிலையும், எண்ண ஓட்டங்களும், கருவிகளுமே உலக அமைதியை சிதைப்பதில் முக்கிய காரணியாக இருக்கின்றன. புத்தரின் தத்துவங்கள் நல்லாட்சிக்கு பல்வேறு வழிவகைகள் வகுத்துத் தந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக இந்தியா, இலங்கை ஆகிய இருநாடுகளுமே புத்தரின் தத்துவங்களால் பயனடையும் ஒரே பிராந்தியத்தில் அமைந்துள்ளன" என்றார்.

மோடி வருகையால் பெருமிதம்..

நிகழ்ச்சியில் பேசிய இலங்கை பிரதமர் விக்ரமசிங்கே, பிரதமர் மோடியின் வருகையால் மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்வதாகக் கூறினார். புத்தரின் படிப்பினைகள் இன்றைய காலகட்டத்துக்கும் பொருத்தமானதே. புத்த மதம் மிதவாதத்தையும் சமூக நீதியை நிலைநிறுத்துவதையுமே வலியுறுத்துகிறது என்றார்.

SCROLL FOR NEXT