குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா வழங்குவதில்லை என்ற கொள்கையை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று கூறி, அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் 12-க்கும் மேற்பட்டோர் இணைந்து இந்தத் தீர்மானத்தை கொண்டு வந்தனர்.
மதரீதியாக சிறுபான்மையினராக உள்ளவர்களின் உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டுமென்று அந்தத் தீர்மானத்தில் இந்தியாவுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மத சுதந்திரத்துக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மோடிக்கு விசா வழங்கக் கூடாது என்று அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முன்னதாக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு 2005-ம் ஆண்டு அமெரிக்க விசா மறுக்கப்பட்டது.