இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததில் 2 பேர் பலியாயி னர். சுமார் 2 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர். சர்வதேச விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
ஜாவா தீவில் உள்ள மிகவும் அபாயகரமான எரிமலைகளில் ஒன்றான கெலூட் வெடிக்கப் போவதாக வியாழக்கிழமை எச்சரிக்கை விடப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான ஒரு சில மணி நேரங்களில் அது பயங்கரமாக வெடித்து தீயைக் கக்கியது.
இதையடுத்து, அந்த எரிமலையைச் சுற்றிலும் 15 கி.மீ. வரையில் பாறைத் துகள்களும் மணலும் மழைபோல் பொழிகின்றன. இதன் காரணமாக வான்வெளியில் சாம்பல் பரவி புகைமூட்டமாகக் காணப்படுகிறது. அப்பகுதியைச் சேர்ந்த கிராமங்களில் உள்ள குடியிருப்பு கள், விமான நிலையங்கள், கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் மீது சாம்பல் படிந்து காணப்படுகிறது.
எரிமலையிலிருந்து வெடித்துச் சிதறிய கற்கள் மலாங் மாவட்டத்தில் உள்ள குடியிருப்புகள் மீது விழுந்ததில் 60 வயதுடைய ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் உயிரிழந்ததாக தேசிய பேரிடர் தடுப்பு முகமையின் செய்தித் தொடர்பாளர் சுடோபோ புர்வோ நுக்ரோஹோ தெரிவித்தார்.
எரிமலையைச் சுற்றி 10 கி.மீ. தொலைவுக்குள் வசிக்கும் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட் டோர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உத்தரவிடப் பட்டுள்ளது.
எரிமலை வெடிப்பு காரணமாக, இந்தோனேசியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் அனைத்து தொலைதூர விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணி களின் பாதுகாப்பு கருதி, புகட், டென்பசர், கிறிஸ்துமஸ் தீவு மற்றும் கோகோஸ் தீவு ஆகிய பகுதிகளில் அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்துள்ளதாக வர்ஜின் ஆஸ்திரேலியா நிறுவனம் தெரிவித்துள்ளது.