'போகிமான் கோ' கதாபாத்திரங்களின் பெயர்களை தங்களது குழந்தைகளுக்கு சூட்ட அமெரிக்க பெற்றோர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதாக சமீபத்தில் நடந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் இன்னும் சில வருடங்களில் உங்களிடம் அறிமுகமாகும் குழந்தைகளின் பெயர்கள் ‘போகிமான் கோ’ விளையாட்டில் வரும் கதாப்பாத்திரங்களை நினைவுப்படுத்தினால் ஆச்சரியப்படுவதில் ஒன்றும் இல்லை.
ஏனெனில் அமெரிக்காவில் தற்போதைய நிலவரத்தின் படி வாஷிங்டனில் அமைந்துள்ள பெரும்பான்மையான குழந்தை நலக்காப்பகத்திலும், குழந்தை வளர்ப்பு தொடர்பான வலைதளங்களிலும் ‘போகிமான் கோ’ விளையாட்டின் கதாப்பாத்திரங்களின் பெயர்களான பிக்காச்சூ, ஒனிக்ஸ், ரூசிலியா, ஈவேய், ஆஷ் ஆகிய பெயர்களை போட்டி போட்டு கொண்டு முன்பதிவு செய்து வருகின்றன.
ரூசிலியா, ஈவேய்
இதில் 'போகிமான் கோ'வின் பெண் கதாப்பாத்திரங்களான ரூசிலியா, ஈவேய், சற்று முன்னிலையில் பெயர்கள் ஆகும்.
இதுக்குறித்து கருத்து தெரிவித்த வாஷிங்டனை சேர்ந்த குழந்தை நலக் காப்பகத்தின் நிறுவனர் லிண்டா முர்ரே, கூறியபோது, “அமெரிக்க பெற்றோர்களின் ‘போகிமான் கோ’ விளையாட்டு மீதான மோகம் என்பது புதியதல்ல. 90களில் வந்த கார்ட்டூன் கதாப்பாத்திரங்களின் பெயர்களுக்கு இம்மாதிரியான வரவேற்பே அமெரிக்க பெற்றோர்கள் கொடுத்துள்ளனர்” என்றார்.