ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மான வரைவை தமிழத் தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
இந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறும் தேதிக்கு முன்பாக அதில் பல திருத்தங்களை கொண்டு வந்து வலுப் படுத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப் பின் தலைவர் ஆர். சம்பந்தன், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரின் கையெழுத்துடன் ஞாயிற்றுக் கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ள விவரம் வருமாறு:
இலங்கைக்கு எதிரான போர்க்குற்றங்கள், மனித உரிமைகள் மீறல் தொடர்பான விசா ரணையை வலுப்படுத்தும் வகையில் இன்னும் சில வாரங்களில் இந்த வரைவுத் தீர்மானத்தில் திருத்தங்கள் கொண்டுவர தீர்மானத்தை ஆதரிப்பவர்கள் முன்வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். இந்த எண்ணத்துடன் சர்வதேச சமூகத்தை அணுகி ஆதரவு கேட்போம்.
போருக்குப் பிறகும் போரின்போதும் நிகழ்த்தப்பட்ட அத்துமீறலால் பாதிப்புக் குள்ளான இலங்கை மக்களுக்கு தீர்மானம் சாதகமாக அமைவதை உறுதி செய்வோம். அத்து மீறல்களுக்கு இலங்கையை பொறுப்பேற்கச் செய்திடவும் பிரிந்து கிடக்கும் சமூகத்தவரை நல்லிணக்கப்படுத்தும் நோக்கிலும் மிக முக்கிய அடுத்த கட்ட நடவடிக்கையாகவே தற்போது பரிசீலனையில் உள்ள வரைவின்படி தீர்மானம் நிறைவேற்றப்படுவது இருக்கும்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த சர்வதேச சமூகத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.