உலகம்

பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார் பிரான்ஸ் நாட்டு அழகி

ஏபி

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற பிரபஞ்ச அழிகி போட்டியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பல் மருத்துவ மாணவி ஐரிஸ் மிட்டனேர் (23) பிரபஞ்ச அழகியாக பட்டம் சூட்டப்பட்டார்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கடந்த சில நாட்களாக, பிரபஞ்ச அழிகிக்கான போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 86 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் திங்கட்கிழமை நடந்த இறுதி சுற்றில் பிரபஞ்ச அழகியாக பிரான்ஸைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஐரிஸ் தேர்வு செய்யப்பட்டார்.

பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐரிஸ் மிட்டனேர் பிரான்ஸ்ஸின் லில்லி நகரை சேர்ந்த பல் மருத்துவ மாணவி ஆவார்.

பிரபஞ்ச அழகி போட்டியில் இரண்டாவது இடத்தை ஹைதி நாட்டைச் சேர்ந்த 25 வயதான ராகுவல் பெலிசியரும், மூன்றாவது இடத்தை கொலம்பியாவின் 23 வயதான ஆண்ட்ரியா டோவரும் பெற்றனர்.

இறுதிச் சுற்றில் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டபோது, "இப்போட்டியில் மூன்று இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக இடம்பெறுவதே எனக்குக் கிடைத்த மிகப் பெரிய கவுரவம்" என்றார்.

நிகழ்ச்சியில் முடிவில் வெற்றியாளராக ஐரிஸ் மிட்டனேர் அறிவிக்கப்பட்டபோது அவரது முகத்தில் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியை காண முடிந்தது.

SCROLL FOR NEXT