மலேசிய பிரதமர் முகம்மது நஜீப் துன் ரசாக் இன்று இந்தியா வருகிறார்.
மலேசிய பிரதமர் ரசாக் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “ஐந்து நாள் பயணமாக இந்தியா செல்கிறேன். கடந்த 1957 முதல் இந்தியா நமது நட்பு நாடாக விளங்குகிறது. பிரதமர் நரேந்திர மோடியை மீண்டும் சந்திக்கும் தருணத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்” என்று கூறியுள்ளார்.
இதற்கு பிரதமர் மோடி அளித்துள்ள ட்விட்டர் செய்தியில், “மலேசிய பிரதமரை வரவேற்பதில் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது. உங்கள் பயணத்தால் இந்தியா மலேசியா இடையிலான உறவு மேலும் வலுப்படும் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
தனது இந்தியப் பயணத்தை இன்று சென்னையில் தொடங்கும் முகம்மது நஜீப் துன் ரசாக், நாளை டெல்லி செல்கிறார்.