உலகம்

இந்தியாவுடன் வலுவான உறவு: பென்டகன்

செய்திப்பிரிவு

இந்தியாவுடன் நீண்ட, நெடிய, வலுவான உறவுக்கு அஸ்திவார மிட்டுள்ளோம் என்று அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

“ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மறுசீரமைப்பு: நடைமுறை ஆய்வுகள்” என்ற தலைப்பில் பென்டகனின் சிறப்பு கமிட்டி ஆய்வறிக்கை தயார் செய்து ள்ளது. இதுதொடர்பாக அதன் பாதுகாப்புத் துறை துணைச் செயலாளர் மைக்கேல் லும்கின், வாஷிங்டனில் புதன்கிழமை கூறியதாவது:

ஆசிய- பசிபிக் பிராந்தியம் அமெரிக்காவின் வளமை, பாதுகாப்பு தொடர்பானது என்பதால் அந்தப் பிராந்தியத்துக்கு அதிபர் ஒபாமா அதிக முக்கியத் துவம் அளித்து வருகிறார். உலக வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கு ஆசியாவில் நடைபெறுகிறது. இதேபோல் உலக சரக்கு கப்பல் போக்குவரத்தில் தெற்கு சீனக் கடல் முக்கிய பங்கு வகிக்கிறது.

எனவே அந்தப் பிராந்திய நாடுகள் உலக பொருளாதாரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. இவற்றின் அடிப்படையில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்துடனான உற வுக்கு அமெரிக்கா முன்னுரிமை அளிக்கிறது.

குறிப்பாக இந்தியா, சீனாவுடன் வலுவான உறவை ஏற்படுத்த அமெரிக்கா விரும்புகிறது. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் நிலவ சீனாவுடன் பென்டகன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது.

இதுதவிர கடல்சார் பாதுகாப்பு, பேரழிவு மீட்பு, தீவிரவாத எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவுக்கும் அமெரிக்காவும் இடையே நீண்ட, நெடிய உறவுக்கு அஸ்திவாரமிட்டுள்ளோம். பாதுகாப்பு துறை தொடர்பான வர்த்தகம், தொழில்நுட்பம், பிராந்திய பாதுகாப்பு தொடர்பா கவும் இரு நாடுகளும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன என்றார்.

SCROLL FOR NEXT