உலகம்

புதிய அலுவலகம் ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபை ஒப்புதல்: தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க இந்தியா வரவேற்பு

பிடிஐ

உலகையே அச்சுறுத்தி வரும் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக புதிய அலுவலகம் ஒன்றை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஒப்புதல் வழங்கியுள்ளது. இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல்படி என இந்தியா வரவேற்றுள்ளது.

193 நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் தீவிரவாதத்துக்கு எதிரான நட வடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கான புதிய அலுவலகம் ஒன்றை அமைப்பதற்காக தீர்மானம் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இதனை வரவேற்ற அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளும் தீர் மானத்தை ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர். இந்த அலுவலகம் ஐநா துணைப் பொதுச்செயலாளர் தலைமையின் கீழ் செயல்படும்.

ஐநாவின் இந்த நடவடிக் கையை இந்தியா வரவேற்றுள்ளது. இதுபற்றி ஐநா சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் சையது அக்பருதீன் கூறும்போது, ‘தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை ஒருங்கிணைப் பதற்காக புதிய அலுவலகம் ஏற்படுத்தி இருப்பது இந்தியாவால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல்படியாகும். தீவிரவாதத்துக்கு எதிரான ஐநாவின் முயற்சிகளை ஒருங்கிணைத்து செம்மைப்படுத்த இது உதவும் என நம்புகிறோம். மாறிவரும் உலக நிலவரம் மற்றும் சர்வதேச சமூகத்தின் தேவைக்கேற்ப ஐநா செயல்பட இந்த அலுவலகம் உதவும்’ என்றார்.

இதற்கிடையே, ஆப்கானிஸ் தான் தலைநகர் காபூலில் செய்தி யாளர்களிடம் பேசிய ஐநா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ், ‘சர்வதேச அளவில் தீவிரவாதத்துக்கு ஆதரவாக எந்த நாடு செயல்பட்டாலும் அதற்காக அதிக விலையை விரைவிலோ அல்லது அதற்குப் பிறகோ அந்நாடு கொடுக்க வேண்டி இருக்கும். தீவிர வாதத்துக்கு எதிரான நடவடிக்கை களுக்காக புதிய அலுவலகம் ஏற்படுத்துவது மோதல் மூளாமல் வருமுன் தடுப்பது, நீடித்த அமைதி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான ஐநா அமைப் பின் முயற்சிகளுக்கு உறுதுணை புரியும்’ என்றார்.

SCROLL FOR NEXT