உலகம்

ஆர்லாண்டோ தாக்குதலின்போது 70 பேரின் உயிரை காப்பாற்றிய இந்தியர்

செய்திப்பிரிவு

அமெரிக்காவின் ஆர்லாண்டோ நகர கேளிக்கை விடுதி தாக்குத லின்போது இந்திய வம்சாவழி யைச் சேர்ந்த இம்ரான் யூசுப் 70 பேரின் உயிரைக் காப்பாற்றியு ள்ளார். அவரை அமெரிக்க மக்கள் ஹீரோவாக கொண்டாடுகின்றனர்.

கடந்த 12-ம் தேதி அதிகாலை ஆர்லாண்டோ நகர தன்பாலின உறவாளர் கேளிக்கை விடுதிக் குள் புகுந்த ஒமர் என்ற ஐ.எஸ். தீவிரவாதி 49 பேரை சுட்டுக் கொன்றான். அந்த நேரத்தில் அங்கிருந்த இந்திய வம்சா வளியைச் சேர்ந்த இம்ரான் யூசுப் தைரியமாகச் செயல்பட்டு 70 பேரின் உயிரைக் காப்பாற்றி யுள்ளார். அமெரிக்க கடற்படை முன்னாள் வீரரான அவர் சிபிஎஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தாக்குதல் நடந்த கேளிக்கை விடுதியில் நான் பாதுகாவலராகப் பணியாற்றி வருகிறேன். தீவிரவாதி ஒமர் கண்மூடித்தனமாக துப்பாக் கியால் சுட்டபோது நானும் கூட்டத்தில் சிக்கிக் கொண்டேன். பயத்தில் மக்கள் அங்கும் இங்கும் அலறி ஓடினர்.

அந்த நேரத்தில் ராணுவத் தில் பணியாற்றிய அனுபவ மும் தைரியமும் எனக்கு கைகொடுத்தது. நூற்றுக் கணக்கானவர்கள் திரண்டிருந்த கூட்டத்தை தாண்டிக் குதித்து சென்று விடுதியின் பின்பக்க கதவை திறந்துவிட்டேன். அங்கிருந்து ஒவ்வொருவராக 70 பேரை விடுதியைவிட்டு வெளியேற்றினேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவர் மட்டும் இல்லையென் றால் உயிரிழப்புகளின் எண்ணிக் கை 100-ஐ தாண்டியிருக்கும், தனது உயிரை பணயம் வைத்து 70 பேரை இம்ரான் யூசுப் காப்பாற்றியுள்ளார் என்று பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

இம்ரான் யூசுபின் மூதா தையர்கள் இந்தியாவில் இருந்து கயானாவில் குடியேறி அங்கிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்துள்ளனர். யூசுபின் தாய், பாட்டி ஆகியோர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள், அந்த மதத்தையே இம்ரான் யூசுபும் பின்பற்றுகிறார் என்று உள்ளூர் நாளிதழ்கள் தெரிவித்துள்ளன.

          
SCROLL FOR NEXT