உலகம்

சிரியா சிறை வைத்துள்ள பெண்கள் குழந்தைகளை விடுவிக்க உடன்பாடு

செய்திப்பிரிவு

சிரியாவில் ஹாம்ஸ் நகரில் அரசால் சிறை வைக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுவிக்க தற்காலிக உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. அமைப்பின் சிறப்புப் பிரதிநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து சிரியாவுக்கான ஐ.நா. மற்றும் அரபு ஒன்றியத்தின் சிறப்புப் பிரதிநிதி லக்தர் பிரஹிமி கூறுகையில், "இரண்டு நாட்களாக நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்படி சிறை வைக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள். எனினும், சிரியாவின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்க சிறிது காலம் ஆகும்” என்றார்.

SCROLL FOR NEXT