உலகம்

லண்டன் நேஷனல் கேலரியில் மலாலா ஓவியம்

செய்திப்பிரிவு

லண்டனின் உள்ள நேஷனல் கேலரியில் பாகிஸ்தானின் கல்வி ஆர்வலரும், மாணவியுமான மலாலா யூசுப்சாய் ஓவியம் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது.

மலாலா வீட்டுப் பாடத்தை எழுதுவதைப்போல் அமைந்துள்ள அந்த ஓவியத்தை வரைந்தவர், பிரிட்டனின் பிரபல ஓவியரான ஜோனதன் யோ.

பாகிஸ்தானில் பெண் கல்வி உரிமையை வலியுறுத்திய மலாலா, கடந்த அக்டோபர் மாதம் தலிபான்களால் சுடப்பட்டார். சிகிச்சைக்காக லண்டன் சென்ற மலாலா, குணமடைந்த பின்னர் அங்கிருக்கும் பள்ளியிலே சேர்ந்து படித்து வருகிறார்.

லண்டனில் மலாலாவை முதன்முறையாக ஏப்ரல் மாதம் சந்தித்த ஜோனதன் யோ, “இன்று உலகில் மிகவும் நம்பிக்கையூட்ட கூடியவர்களில் ஒருவரான மலாலாவை வரைந்தததில் தனக்கு பெருமையாக இருக்கிறது” என்றார்.

இந்த ஓவியத்தை, பெண் கல்வி உரிமைக்காக குரல் கொடுக்கும் மலாலாவின் தொண்டு நிதிக்காக ஏலத்தில்விட திட்டமிடப்பட்டுள்ளது.

மலாலாவின் துணிச்சலையும் நற்பணியையும் பாராட்டி, அவருக்கு சமீபத்தில் சர்வதேச குழந்தைகளின் அமைதிக்கான பரிசு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT