உலகம்

இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்த அமெரிக்காவில் சதி: இந்தியருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை

பிடிஐ

இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்த அமெரிக்காவில் சதி திட்டம் தீட்டிய குற்றத்துக்காக, இந்தியருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தியரான பல்வீந்தர் சிங் (42) அமெரிக்காவின் நெவேடா மாகாணத்தின் ரெனோ நகரில் வசிக்கிறார். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் தனி நாடு கோரி தீவிரவாத செயலில் இறங்கிய காலிஸ்தான் இயக்கத்துடன் இவருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து பல்வீந்தர் சிங் மீது எப்பிஐ உள்ளிட்ட அமைப்புகள் வழக்குப் பதிவு செய்தன. மேலும் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கை விசாரித்த ரெனோ மாவட்ட நீதிபதி லாரி ஹிக்ஸ், குற்றம் சாட்டப்பட்ட பல்வீந்தர் சிங்குக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார். அத்துடன் விடுதலைக்குப் பிறகு வாழ்நாள் முழுவதும் பல்வீந்தர் சிங் அரசு கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து. டிசம்பர் மாதத்துக்குள் தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து காலிஸ்தான் இயக்கத்தின் மூலம் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியுள்ளார். அதற்கான நிதி, பொருட்கள் உட்பட எல்லா உதவிகளையும் செய்வதாக பல்வீந் தர் சிங் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் டேனியல் போக்டன் கூறும்போது, ‘‘பல்வீந்தர்சிங் காலிஸ்தான் தீவிரவாத இயக்கத் துக்கு ஆதரவளிக்காதவர்கள் மற்றும் இந்திய அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியது உறுதிபடுத்தப்பட்டது’’ என்றார்.

இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட சிங்கின் கூட்டாளி, சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத் தில் இருந்து பாங்காக் செல்லும் போது அமெரிக்க உளவுப் பிரிவி னரால் கைது செய்யப்பட்டார். இதன்மூலம் இந்தியாவில் நடக்க இருந்த தாக்குதல் முறியடிக்கப் பட்டது. கூட்டாளி கைது செய்யப் பட்ட பிறகும் பல்வீந்தர் சிங்கும் மற்ற கூட்டாளிகளும் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள னர். ஆனால், டிசம்பர் 2013-ல் அவரையும் போலீஸார் கைது செய் தனர். இத்தகவல்கள் அனைத்தும் நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT