சீனா அனுப்பிய யூட்டு அல்லது ஜாட் ரேபிட் என்ற ஆய்வுக்கலம் நிலவில் ஞாயிற்றுக்கிழமை காலை 4.35 மணிக்குத் (சீன நேரப்படி) தரையிறங்கியது.
விண்கலத்தில் இருந்து பிரிந்த ஜாட் ரேபிட் ஆய்வுக்கலம் நிலவில் தரையிறங்கும் காட்சிகள் வீடியோவாகவும் ஒளிப்படமாகவும் எடுக்கப்பட்டு பூமிக்கு அனுப்பப் பட்டுள்ளன.
ஆறு சக்கரங்களைக் கொண்ட இந்த ஜாட் ரேபிட் சீனா நிலவுக்கு அனுப்பும் முதல் ஆய்வுக்கலம் ஆகும். ஜாட் ரேபிட் ஆய்வுக்கலம், நிலவின் மேற்பரப்பில் விமானம் தரையிறங்குவது போல் அலுங்கா மல் தரையிறங்கியது. கடந்த 37 ஆண்டுகளில் ஆய்வுக்கலம் ஒன்று நிலவின் மேற்பரப்பில் இவ்வாறு அமைதியான முறையில் தரையிறங்குவது இதுவே முதன் முறையாகும்.
நிலவில் ஆய்வுக் கலத்தைச் சேதமின்றித் தரையிறக்கிய 3-வது நாடு என்ற பெருமையை சீனா அடைந்துள்ளது. முன்னதாக அமெரிக்கா மற்றும் முன்னாள் சோவியத் யூனியன் ஆகிய நாடுகள் ஆய்வுக் கலத்தை மிக அமைதியான முறையில், ஆய்வுக் கலத்திற்கு எவ்வித சிறு சேதாரமும் நேராமல் தரையிறக்கியுள்ளன.
நிலவின் வானவில் குடா பகுதியில் இந்த ஆய்வுக்கலம் தரையிறங்கியுள்ளது. லாங் மார்ச் -3 என்ற ஏவுகணை மூலம் இந்த ஆய்வுக்கலம் அனுப்பப்பட்டது. இது சேஞ்ச்-3 எனவும் அழைக் கப்படுகிறது.
“வானவில் குடாவின் அறியப்ப டாத உண்மைகளை இந்தக் கலம் ஆய்வு செய்யும். நிலவு தொடர்பான ஆய்வு வரலாற்றில் இக்கலம் புதிய தடத்தைப் பதிவு செய்துள்ளது. சேஞ்ச்-3க்கு முன்னதாக நிலவுக்கு 129 விண்கலங்கள் அனுப்பும் திட்டங் கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் பாதி அளவு திட்டங்களே வெற்றி பெற்றுள்ளன. அதிலும் ஆளில்லா விண்கலத்தை மென்மையாகத் தரையிறக்குவதில் அமெரிக்காவும் சோவியத் ரஷ்யாவும் 13 முறை வெற்றிபெற்றுள்ளன.
சேஞ்ச் -3 திட்டம் சீனா வின் விண்வெளி ஆய்வுத் துறை யின் மிகப்பெரிய படி” என ஜின்குவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.