உலகம்

கனவு இந்தியாவை நிஜமாக்குவோம்: உலகளாவிய இந்தியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு

செய்திப்பிரிவு

நமது கனவு இந்தியாவை நிஜத்தில் உருவாக்க வாருங்கள் என்று உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

ஜி20 மாநாட்டில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் மோடி நேற்று சிட்னி நகரில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் பங்கேற்ற கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வந்த பிறகு விமான நிலையத்தில் விசா பெற்றுக் கொள்ளும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். வெளிநாடுகளில் வசிக்கும் இந்தி யர்கள் இரட்டை குடியுரிமை கோருவது குறித்து மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வரு கிறது. இன்னும் 2 மாதங்களில் அதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும்.

இந்தியா குறித்து நாம் பல்வேறு கனவு கண்டு வருகிறோம். அந்த கனவுகளை நிஜமாக்கும் வகை யில் புதிய இந்தியாவை உரு வாக்க வேண்டும். அதற்கு உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

சுதந்திரத்துக்குப் பிறகு பிறந்தவன் என்ற வகையில் நான் அதிர்ஷ்டசாலியாக உணருகிறேன். நமது முன்னோர்கள் நாட்டுக்காக உயிர் நீத்தார்கள், சுதந்திரத்துக்காக பல ஆண்டுகள் சிறைவாசம் அனு பவித்தார்கள். நமக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை. எனினும் சுதந்திரத்துக்குப் பிறகு பிறந்த நாம் நாட்டின் வளர்ச்சிக்காக, முன்னேற்றத்துக்காக நமது வாழ் நாளை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் 125 கோடி மக்கள் உள்ளனர். அந்த வகையில் சுமார் 250 கோடி உழைக்கும் கரங்கள் உள்ளன. அதில் 200 கோடிக் கும் மேற்பட்ட கரங்கள் இளமை யானவை. எதையும் சாதிக்கும் திறன் படைத்தவை. அந்த கரங்கள் புதிய இந்தியாவை படைக்கும்.

நிறுவனங்களுக்கு அழைப்பு

கடந்த ஆட்சியில் தொழில் துறையை முடக்கும் வகை யில் பல்வேறு சட்டங்கள் இயற்றப் பட்டன. அந்தச் சட்டங்களை நாங்கள் உடைத்து வருகிறோம். தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில் புதிய கொள்கைகளை வகுத்துள்ளோம். எனவே வெளி நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் இப்போது ஒரு மாற்றத்தை உணர லாம். ரயில்வே துறையில் அந்நிய முதலீட்டை 100 சத வீதம் உயர்த்தியுள்ளோம். எனவே ரயில்வே துறையில் ஆஸ்தி ரேலிய நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.

முன்னதாக குயின்ஸ்லாந்து மாகாண முதல்வர் கேம்ப்பெல் பிரதமர் நரேந்திர மோடி சந்தித் துப் பேசினார். அப்போது நிலக் கரி சுரங்கம் தொடர்பாக குயின்ஸ் லாந்து அரசுக்கும் இந்தியாவின் அதானி குழுமத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆஸ்திரேலியாவில் இருந்து அதிக அளவில் நிலக்கரியை இறக்கு மதியை செய்ய இந்தியா விரும்பு கிறது. எனினும் சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத சூரிய மின் சக்தி, காற்றாலை உள்ளிட்ட திட் டங்களில் பிரதமர் மோடி மிகுந்த ஆர்வம் காட்டியதாக கேம்ப்பெல் தெரிவித்தார்.

ஸ்மார்ட் சிட்டி ஆலோசனை

இந்தியாவில் 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். ஜப்பான் சென்றிருந்தபோது இத்திட்டம் தொடர்பாக அந்த நாட்டு தலை வர்களோடு மோடி ஆலோசனை நடத்தினார்.

அதுபோல் ஆஸ்திரேலியாவில் சிட்னி நகர மேயர் கிரஹாம் குவார்க்கை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இதுகுறித்து கிரஹாம் குவார்க் கூறியபோது, இந்திய ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதாக தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரை

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து அந்த நாட்டு பிரதமர் டோனி அபோட்டை சந்தித்துப் பேசுகிறார்.அப்போது பாது காப்பு, வர்த்தகம், தொழில் துறை, கைதிகளை பரஸ்பரம் ஒப்படைப் பது, போதைப்பொருள் தடுத்தல், சுற்றுலா, கலாச்சாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT